குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' |
வெற்றி கிடைத்தால் தலைக்கு ஏற்றாமல் இருப்பதும், தோல்வி கிடைத்தால் சமாளித்து அடுத்தகட்டத்திற்கு நகர்வதும் வாழ்க்கையில் அவசியம். சினிமாவை பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டையும் நம்பக்கூடாது. என் திறமைக்கும் சவால் விடும் படங்களில் நடிப்பேன், என்கிறார் சார்பட்டா பரம்பரை நாயகி துஷாரா விஜயன்.
நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
துஷாராவின் பயணத்தில் முக்கியமான தருணம்?
நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், தேர்வு செய்யும் படம் உட்பட அனைத்துமே எனக்கு முக்கியமான தருணமே.
இதுவரை துஷாரா கற்றுக்கொண்ட பாடத்தில் முதன்மையானது?
கடுமையான உழைப்பும், பொறுமையும் தான் என்னை தற்போது இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த இரண்டுமே ரொம்ப முக்கியமானது.
மாடலிங், சின்னத்திரை, சினிமா உங்களுக்கு பிடித்தது?
சந்தேகமே வேண்டாம். சினிமா தான் பிடிக்கும்; எனக்கு சினிமா தான் எல்லாமே!
கோலிவுட்டில் பெண்களுக்கான வாய்ப்பு, அதுவும் புதியவர்களுக்கான வாய்ப்பு எப்படி உள்ளது?
கோலிவுட்டில் மட்டுமல்ல; எனக்கு தெரிந்து சமீபகாலமாக திறமை இருந்தால், எல்லா இடத்திலும் பெண்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர். வாய்ப்பை நாமே உருவாக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவும் தெரிய வேண்டும். இது ரொம்ப முக்கியம். திறமையை வளர்த்துக் கொண்டே இருந்தால், தகுந்த வாய்ப்பு கிடைக்கும்.
சினிமாவில் நம்ப வேண்டியது; நம்ப கூடாதது எது?
வெற்றியும், தோல்வியும் மட்டும் தான். இரண்டுமே அடுத்தடுத்து கிடைக்குமா என்பது தெரியாது. வெற்றி கிடைத்தால் தலைக்கு ஏற்றாமல் இருப்பதும், தோல்வி கிடைத்தால் அதை சரியாக அணுகி அடுத்தகட்டத்திற்கு நகர்வதும் அவசியம். சினிமாவை பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டையும் நம்பக்கூடாது.
அதிர்ஷ்டம் மேல் நம்பிக்கை உண்டா?
எனக்கு தெரியல. சிலர் என்னை ரொம்ப அதிர்ஷ்டசாலி என்பர். சீக்கிரமா சினிமாவில் முன்னுக்கு வந்து விட்டாய் என்பர். ஆனால், அதற்கு பின் ஏழு ஆண்டு உழைப்பு உண்டு. ஒரு வேளை கடின உழைப்பை தான் மற்றவர்கள் அதிர்ஷ்டம் என்கிறார்களோ என்னமோ!
எதிர்காலத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா?
அரசியல் மேல் சிறுவயது முதலே ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்; அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டும்; பொது அறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை எப்போதும் உள்ளது. என்னால் முடிந்த வரை கற்றுக் கொண்டே இருப்பேன்.
உங்களுடையது காதல் திருமணமா? நிச்சயிக்கும் திருமணமா?
திருமணத்தை பற்றி அடுத்த 10 ஆண்டுக்கு பேச வேண்டியதில்லை. அதில் பெரிய ஈடுபாடும் இல்லை. இப்போதைக்கு நான் எடுத்துக் கொண்ட முயற்சியில் சாதிக்க வேண்டும். காதல் திருமணமா, நிச்சயித்த திருமணமா என்பதும் இப்போதைக்கு தெரியாது.
எந்த மாதிரி கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை தர நினைக்கிறீர்கள்?
கதைகள் என்னை முதலில் கவர வேண்டும். படத்தில் நான் நடிக்கும் காட்சிகள் இரண்டு நிமிடம் வந்தாலும், அது மனதில் பதிய வேண்டும். வாழ்க்கை வரலாற்று மற்றும் வாழ்வியல் குறித்த படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
அடுத்து நடித்து வரும் படங்கள்?
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன்தாஸ் உடன் அநீதி படமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் உடன் நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நடிக்கிறேன். கதையும் கேட்டு வருகிறேன். திறமைக்கு சவால்விடும் படம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன்.