பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி | நடிகையை கடத்தி துன்புறுத்த திலீப் தான் பணம் கொடுத்தார் : முதல் குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு பேச்சு | குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
படம் : நந்தா
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : சூர்யா, ராஜ்கிரண், லைலா, கருணாஸ்
இயக்கம் : பாலா
தயாரிப்பு : அப்ராஜீத்
சினிமாவில் ஓர் அங்கீகாரத்திற்காக நீண்ட நாள் போராடி கொண்டிருந்த சூர்யாவிற்கு வாழ்வு அளித்த படம், நந்தா. இப்படத்தில் நடிக்க வேண்டியது, அஜித். பாலாவின் கதை சொல்லும் முறையில் திருப்தி இல்லாததால், அவர் விலகினார்.
சேது என்ற தன் முதல் படத்திலேயே, தேசிய அளவில் கவனத்தை பெற்ற பாலா, நந்தா படத்தின் கதையை, இலங்கை அகதிகள் பிரச்னை வழியே முன்னெடுத்து சென்றார். சிறுவயதில் தந்தையை கொலை செய்து, சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் நந்தா, தன் தாயின் பாசத்திற்கு ஏங்குகிறார். நந்தாவை, அப்பகுதி பெரியவரான ராஜ்கிரண் வளர்க்கிறார். இதற்கிடையில் ராஜ்கிரண் கொலை செய்யப்பட, அவரை கொன்றவனை, நந்தா பழிவாங்குகிறான். ஆனால், கொலைகாரனாக இருக்கும் தன் மகனை, தாயே விஷம் வைத்து கொல்கிறார். இது தான், படத்தின் கதை.
பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் நபருக்கு, சூர்யா கொடுக்கும் தண்டனை, தியேட்டரில் கைத்தட்டலை பெற்றது. பெரியவர் கதாபாத்திரத்தில் நடிக்க, சிவாஜி கணேசனை பார்த்து, நடுநடுங்கியபடியே கதை சொல்லி, அவரின் ஆளுமைக்கு பயந்து ஓடி வந்ததை, பாலாவே சொல்லியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்தார். இதன் மூலம் ராஜ்கிரண், 'ரீ என்ட்ரி' ஆனார்.
'லொடுக்கு பாண்டி' கதாபாத்திரம் வழியாக, நாட்டுப்புற பாடகராக இருந்த கருணாஸ், காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். அகதி பெண் கல்யாணியாக லைலா, சிறப்பாக நடித்திருந்தார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், 'எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய், கள்ளி அடி கள்ளி, முன் பனியா...' பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 'பாலாவின் படம்' என்ற ராஜபாட்டை, இப்படத்திலிருந்து விரியத் துவங்கியது.
மறுபடியும் கோபத்தோடு வாருங்கள் பாலா!