'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் |

சினிமா மற்றும் சின்னத்திரையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ரீரித்திகா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்ததில் திருமுருகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாதஸ்வரம் சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், ஷானீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீரித்திகா நாதஸ்வரம் சீரியல் நடித்த போது வந்த வதந்திகள் தனக்கு பெரிய தலைவலியாக அமைந்ததாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், 'என்னை பற்றி யாரும் தவறாக பேசிவிடமுடியாது. அந்த அளவிற்கு என் அம்மா என்னை வளர்த்திருக்கிறார். ஆனால், நாதஸ்வரம் சீரியலில் நடித்த போது நிறைய வதந்திகள் வந்தது. இயக்குநர் திருமுருகன் என்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் பலரும் செய்திகள் பரப்பினர். அந்த நேரத்தில் அந்த வதந்திகள் என்னை மிகவும் பாதித்தது' என்று கூறியுள்ளார்.