ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. ஆமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன். இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு “பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் ரொம்ப தூரம் ஓடுங்கள்” என்றும், “கிரிக்கெட் கோப்பைக்கும் உங்கள் நிர்வாணத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றும் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
இதேபோன்றுதான் 2011ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று பூனம் பாண்டே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.