நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா. மாடலிங்கில் இருந்த லாவண்யா, விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் நடிக்க வந்தார். அந்த தொடருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் சீக்கிரமே நிறைவுற்றது. இந்நிலையில், அடுத்த வாய்ப்பிற்காக காத்திருந்த அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே, வீஜே சித்ரா, காவ்யா அறிவுமணி என இரண்டு நடிகைகள் நடித்திருப்பதால் முல்லை கதாபாத்திரம் லாவண்யாவுக்கு செட்டாகாது என பலரும் நெகட்டிவாக பேசி வந்தனர். ஆனால், புதிய முல்லையாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் கட்சிதமாக செட்டாகி மக்களிடம் பிரபலமாகிவிட்டார்.
மேலும், அவர் தற்போது 'ரேசர்' என்கிற புதிய படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் லாவண்யாவின் குடும்பத்தினர் முதலில் லாவண்யாவை நடிக்க அனுமதிக்கவில்லை என்றும், இதனால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதற்காக தான் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் குறித்தும் லாவண்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.