செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழில் வெளியான 'பைவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கனிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த கனிகாவுக்கு அடுத்தடுத்து தமிழில் வெளியான வரலாறு படங்கள் தவிர்த்து மற்ற படங்கள் எதுவும் சிறப்பாக அமையவில்லை. தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே கனிகா நடித்திருந்தாலும் தாய் வீடான மலையாளம் மட்டுமே அவருக்கு கை கொடுத்தது.
தற்போது கனிகாவுக்கு நாற்பது வயதாகிறது. 12 வயதில் அவருக்கு மகன் இருக்கிறார். எனினும், இப்போதும் ஹீரோயினாக நடிக்கலாம் என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கனிகா தன்னை பிட்டாக வைத்திருக்கிறார். பிட்னஸ் சேலஞ்ச் என அவர் வெளியிடும் யோகா, வொர்க் அவுட் புகைப்படங்களுக்கும் தனியே ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை கனிகா வெளியிட்டுள்ளார். கனிகாவின் கட்டழகை பார்த்து வியக்கும் நெட்டிசன்கள் 'இந்த வயசுலயும் சும்மா நச்சுன்னு இருக்குது அழகு' என கமெண்டுகளில் பாராட்டி வருகின்றனர்.
கனிகா தற்போது 'எதிர்நீச்சல்' என்ற தொடரில் நடித்து வருகிறார். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.