ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு பரிட்சயமானவர் குமரன் தங்கராஜன். அதன் பின் சீரியல் சினிமா என நடிகராக உருவெடுத்தார். தற்போது விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015ம் ஆண்டிலேயே குமரன் 'இது என்ன மாயம்' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும், தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அவர் வெள்ளித்திரை கலைஞர்களுடன் இணைந்துள்ளார். ஓடிடி தளத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 'வதந்தி' என்கிற வலைத்தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த வலைத்தொடரின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார். டீசரில் குமரன் தங்கராஜனின் கெட்டப்பை பார்க்கும் போது படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. இதனயடுத்து குமரனின் ரசிகர்கள் பலரும் அவரது திரைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.