'3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! | 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது | இளையராஜா இசையில் பாடிய முதல் பாடல்: பாடகி நித்யஸ்ரீ மகிழ்ச்சி | வினோத நோய் : கரண் ஜோகர் விளக்கம் | அமேசான் ஓடிடி தளத்திலும் இனி விளம்பரங்கள் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சாந்தினி படம் | பிளாஷ்பேக் : பூனை கண்ணை மறைக்க லென்ஸ் வைத்து நடித்த சாதனா | பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அன்னக்கிளி, இளையராஜா | ஜெயசூர்யாவின் ஆடு 3 படப்பிடிப்பு துவங்கியது |
கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் 'வதந்தி'. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த சில மாதங்களாக வதந்தி 2ம் பாகத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வதந்தி 2ம் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.