100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள வெப் தொடர் வதந்தி. முதன் முறையயாக எஸ்.ஜே.சூர்யா வெப் தொடரில் அறிமுகமாகிறார். இவர் தவிர சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். டிசம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. தமிழ் தவிர தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் காணலாம்.
இதுகுறித்து புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: இன்றைய ரசிகர்கள் தாங்கள் எதை விரும்பிப் பார்ப்பது என்பதில் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பதால் அவர்களுக்கான ஒரு வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் ஆழ்ந்து பதியக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட கதைக்களத்தை உருவாக்குவது மிக முக்கியமான ஒன்று.
போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் ஒரு வலை பின்னப்படுகிறது. தான் சிக்க வைக்கப்பட்டிருக்கிறறோம் என்பதை உணரும் அவர் அதிலிருந்து எப்படி தன்னை விடுவிக்கிறார் என்பதை சொல்லும் புதுமையான கதை இது.
இந்தக் கதை பார்வையாளர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், இறுதியில் படம் முடிந்த பிறகும் அவர்களை சிந்திக்க வைக்கும். எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு மூத்த கலைஞர் தலைமையிலான ஒரு உன்னதமான திறமையுடன் கூடிய நட்சத்திரக் குழுவோடும் மற்றும் சஞ்சனா போன்ற புதிய அறிமுகங்களோடும் நிறைந்த இந்தத் தொடர் அதன் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை கட்டுண்டு கிடக்கச்செய்யும் என்கிறார்கள், புஷ்கரும், காயத்ரியும்.




