ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி வெளியானது | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் | 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள் |

வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமான அஞ்சலி ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள், சீரியல்கள், வெப் சீரியஸ்கள் என பிசியாக நடித்து ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார். 'வந்தால் மஹாலெட்சுமி' என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்கிற வெப்தொடரில் அஞ்சலி ராவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. 'சூது கவ்வும்', 'அச்சம் என்பது மடமையடா', 'போத்தனூர் தபால்நிலையம்' ஆகிய படங்களும், 'மஹாலெட்சுமி', 'லெட்சுமி ஸ்டோர்ஸ்', 'தலையணைப் பூக்கள்' ஆகிய தொடர்களும் அஞ்சலி ராவ் நடித்ததில் குறிப்பிடத்தக்கவை. தற்போது அவர் கலர்ஸ் தமிழின் 'பச்சக்கிளி' தொடரின் மூலம் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் நாயகன் ஸ்டாலின் முத்துவுக்கு ஜோடியாக வக்கீல் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி ராவ் நடிக்க ஆரம்பித்துள்ளார். வக்கீல் ரம்யாவின் வாத திறமையை திரையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.




