லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முந்தைய பிக்பாஸ் சீசன்களே ஒப்பிடும் போது சீசன் 5 பெரிய அளவில் ஹிட் ஆக வில்லை. ரசிகர்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் வண்ணம் படக்குழுவினர் பல வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரத்குமார் என்ட்ரீ கொடுத்துள்ளார். டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குக்கு பிறகு, ஒரு குறிப்பிட்ட தொகையுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஆப்சன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். இம்முறை அந்த டாஸ்க்கில் சரத்குமார் பெட்டியை எடுத்து வந்துள்ளார்.
அப்போது, 'போட்டி என்றால் வெற்றி தோல்வி இருக்கும். இந்த பெட்டியில் 3 லட்ச ரூபாய் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கலாம். இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகலாம். அது உங்கள் முடிவு.
ஆனால், அந்த முடிவு எடுக்கும் போது கவனம் தேவை. இன்றைய நன்மையா அல்லது நாளைய சாதனையா என்பதை யோசித்து முடிவெடுங்கள்' என்றுகூறி அந்த பணப் பெட்டியை வைத்து செல்கிறார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.