விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் : பிரேமலதா | சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் |
கலர்ஸ் தமிழ் சேனலின் புதிய தொடர் வள்ளி திருமணம். இதில் நட்சத்திரா, நளினி, நாஞ்சில் விஜயன், ஷியாம் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் வள்ளி திருமணம் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேனியை மையமாக கொண்ட கதை களம். கிராமத்து தெனாவெட்டு பெண் வள்ளி. கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடி வசூல் செய்வதுதான் அவரது தொழில். ஆனாலும் அன்புக்கு கட்டுப்பட்டவள். இவ்வளவு அடாவடியாக பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று கவலைப்படுகிறார் தாய். இந்த நேரத்தில் வெளிநாட்டில் தொழில் செய்து வரும் கார்த்திக் தொழில் விஷயமாக தேனிக்கு வருகிறார். வந்த இடத்தில் வள்ளியை சந்தித்து காதல் கொள்கிறார்.
காதலித்த பிறகுதான் அவர் அடாவடியான பெண் என்று தெரிகிறது. இதனால் அவர் தன் குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கருதி அவரிடமிருந்து ஒதுங்குகிறார். தனது அடாவடித்தனமான குணம்தான் தன் காதலுக்கு தடையாக இருக்கிறது என்று கருதும் வள்ளி, தன் குணத்தை மாற்றிக் கொண்டு காதலுக்காக அடக்க ஒடுக்கமான பெண்ணாக மாறுகிறார். அவர்கள் காதல் கைகூடியதா? வள்ளி ஏன் அடாவடி பெண்ணாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் தொடரின் கதை.