துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமாலா பால், 'சிந்து சமவெளி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அமலா பால், 'மைனா' படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு வேட்டை, தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதைத்தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை அமலா பால் வெளியிட்டு வருகிறார். அதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்துபோவது அவர் வழக்கம். இந்த நிலையில் அவர் பிகினி அணிந்து கடற்கரையில் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, அமலா பாலின் பிட்னஸ் பற்றி பேசினார்கள். மற்றவர்கள் அவரை கிண்டல் செய்தார்கள். இந்த நிலையில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அமலா பால். அவர் கூறியிருப்பதாவது... “அவள் விரும்பியபடி வாழ்வாள். அதனால் சமூக வலைதளங்களில் பெண்களைக் குறிவைப்பதை நிறுத்தவும். ஒரு பெண் தன் விருப்பப்படி உடை அணிவாள். அவளின் உடை பற்றி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறியுள்ளார்.