ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான விரைவில் வீடியோ புரோமோவை வெளியிட்டுள்ளனர்.
'பிக் பாஸ் சீசன் 4' முடிந்த உடனே டிவி நேயர்கள் மிகவும் கவலை அடைந்துவிட்டதாகவும், அவர்களுக்கு அதிகமாக 'போர்' அடித்ததாகவும், அதைப் போக்க 'பிக் பாஸ் சீசன் 5' வருகிறது என்ற கான்செப்ட் உடன் அந்த புரோமோ அமைந்துள்ளது.
இந்த புதிய 5வது சீசனின் லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும், முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் புதிய டாஸ்க்குகள், புதிய அரங்கு உள்ளிட்ட பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் இடம் பெற உள்ளதாகத் தெரிகிறது.
புதிய புரோமோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ள நாகார்ஜுனா தனது சக பிக் பாஸ் தொகுப்பாளர்களான சல்மான்கான், கமல்ஹாசன், மோகன்லால், கிச்சா சுதீப், கரண் ஜோஹர் உள்ளிட்டவர்களையும் 'டேக்' செய்துள்ளார்.
தெலுங்கு பிக் பாஸ் புரோமோ வெளிவந்ததை அடுத்து விரைவில் தமிழ் பிக் பாஸ் புரோமோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்களாம்.