அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் | காதலியின் மகள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகர் தர்ஷன் | அரபு நாடுகளில் மரண மாஸ் திரைப்படம் வெளியாக தடை | 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி |
தமிழில் மலையூர் மம்பட்டியான், கும்பக்கரை தங்கய்யா, சந்தன கடத்தில் வீரப்பன் போன்று நெகட்டிவ் ஹீரோக்களின் கதை சினிமா ஆகியிருக்கிறது. தெலுங்கில் அதுபோன்ற புதிய டிரண்ட் உருவாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து இளம் ஹீரோ பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் ஸ்டூவர்புரம் டோங்கா. இந்த படம் 1970 களில் ஸ்டூவர்புரத்தின் பிரபல திருடனான டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை கதை.
எத்தனை முறை, எந்த மாதிரியான சிறையில் அடைத்தாலும் அதிலிருந்து தப்பித்து விடுவது நாகேஸ்வரராவின் ஸ்டைல். ஜெயிலில் இருந்த தப்பித்த வழிமுறைகளை வைத்தே சிறையின் பாதுகாப்பை டிசைன் செய்ததாக கூறுவார்கள். அடிக்கடி சிறையில் இருந்து தப்பித்ததால் அவரது பெயருக்கு முன்னால் டைகர் என்ற பட்டமும் சேர்ந்து கொண்டது. 1987ல் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
படத்தை பெல்லம்கொண்டா, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கே.எஸ்.இயக்குகிறார், மணிசர்மா இசை அமைக்கிறார். ஷ்யாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் தெலுங்கு படமான சத்ரபதியை ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ். அந்த படத்தை முடித்து விட்டு இதில் நடிக்கிறார்.