ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
முன்பெல்லாம் ஒரு படம் வெளியான பின்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் படம் தங்கள் சமுதாயத்தையும், தங்கள் மதத்தையும் காயப்படுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதன் பிறகு படப்பிடிப்பில் இருக்கும்போதே சில படங்களுக்கு தாங்களாக கேள்விப்பட்ட தகவல்களை வைத்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட உடனேயே சிலர் தாங்களாகவே ஏதோ கற்பனை செய்து கொண்டு உடனடியாக எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் மலையாளத்தில் பிரபல இயக்குனரும் திலீப்பின் நண்பருமான நாதிர்ஷா என்பவர், தான் அடுத்து இயக்கும் படத்திற்கு ஈஷோ என டைட்டில் வைத்துள்ளார். ஆனால் இந்த டைட்டில் கிறிஸ்துவர்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது எனக் கூறி ஒரு சாரார் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதேசமயம் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் இயக்குனர் நாதிர்ஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள் இதுபற்றி இயக்குனர் நாதிர்ஷா கூறும்போது, இந்த படத்தின் டைட்டில் எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் வைக்கப்படவில்லை. படத்தில் ஹீரோவின் கதாபாத்திர பெயராகத்தான் வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகு இப்போது எதிர்ப்பவர்கள் இதற்காகவா நாம் எதிர்த்தோம் என்று அவர்களே நினைப்பார்கள். அதனால் டைட்டிலை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.