இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்தப்படத்தின் கதையை சஜீவ் பழூர் என்பவர் எழுதியிருந்தார். தற்போது திலீப் அறுபது வயது கிழவராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துவரும் 'கேசு ஈ வீட்டிண்டே நாதன் என்கிற படத்திற்கும் இவர் தான் கதை எழுதியுள்ளார். மலையாள கதாசிரியர் என்றாலும் தற்போது, இவர் தமிழில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான வரலாற்று படமான மாமாங்கம் படத்தின் கதையை எழுதிய இவரே, அந்தப்படத்தை இவரே சில நாட்கள் இயக்கினார். ஆனால் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட இவர் தற்போது தமிழில் இயக்குனராக அறிமுகமாவது ஆச்சரியாமான ஒன்று தான்.