
கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் புஷ்பா முதல் பாகம்
கடந்த வருடம் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்தவகையில் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படம் வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
ஆனால் தற்போது சூழல் வேறு மாதிரியாக இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வசூல் ரீதியாக பாதிப்பு அடைய வேண்டாம் என புஷ்பா படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மகேஷ்பாபு படத்திற்கு முன்னதாகவே இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!