ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
'இந்தியன் 2' படத்தின் எஞ்சிய பகுதிகளை எடுத்து முடிப்பதற்குள் லைகாவுக்கும், ஷங்கருக்கும் தகராறு வந்துவிட்டது. அதனால், அடுத்து தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்தார் ஷங்கர். அதனால், நீதிமன்றத்தில் லைகா வழக்கு தொடர்ந்தது.
அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையே, லைகா நிறுவனம், தெலுங்கு மற்றும் ஹிந்தி தயாரிப்பாளர் சங்கத்திடம் ஷங்கர் மீது புகார் கடிதத்தை அளித்தது. அது பற்றி இன்னும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.
இதனிடையே, 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுப்பது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கட்டும். அதேசமயம் ராம் சரண் படத்தை இயக்குவதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என ஷங்கர் முடிவெடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கும், ஐதராபாத்திலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின்பு தான் எந்தப் படம் நடக்கும் என்பது தெரியும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.