மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமா பிரபலங்கள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நடிகர் சிம்பு டுவிட்டரில் ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக இருந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகினார்.
மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் தளத்தில் இணைந்தார். அதில் அவரை 2 லட்சத்திற்கும் கூடுதலானோர் பாலோ செய்து வருகிறார்கள். அதே காலகட்டத்தில் தான் இன்ஸ்டாகிராம் தளத்திலும் புதிய கணக்கை ஆரம்பித்தார். ஆனால், அங்கு அவரைத் தொடர்பவர்கள் டுவிட்டரை விட அதிகமாக இருக்கின்றனர். தற்போது இன்ஸ்டாவில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டிவிட்டது.
“முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்,” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு. சமீபத்தில் தான் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படப் பாடலான 'மாங்கல்யம்' பாடல் அவருக்கு முதலாவது 100 மில்லியன் என்ற சாதனையைக் கொடுத்துள்ளது.
யு டியூபில் 100 மில்லியனையும், இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனையும் அடுத்தடுத்து பிடித்துள்ளார் சிம்பு.