'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நம் கண்ணுக்குத் தெரியாத பல திறமைசாலிகள் உலகத்தின் பல இடங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைத்து மேலேறி வருகிறார்கள். சிலருக்கு அந்த சந்தர்ப்பம் சரியாக அமையாமல் அப்படியே இருக்கிறார்கள்.
இந்த சமூக வலைத்தள உலகத்தில் பல திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. சில நாட்களுக்கு முன் ஒருவர், தெருவில் பூம் பூம் மாடு வைத்துக் கொண்டு நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ ஒன்றை ஒருவர் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவை இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்குமார் ஷேர் செய்து “இவர் யார் எனத் தெரிந்தால் அவரை பதிவுக்கு பயன்படுத்திக் கொள்வேன். மிகவும் திறமைசாலி, நோட்ஸ்களில் மிகவும் துல்லியம்,” எனப் பாராட்டியிருந்தார்.
அன்றைய தினமே அவர் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசியையும் ஒருவர் பகிர்ந்தார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் மாட்டுடன், நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் கலைஞருக்கு விரைவில் தன் இசையில் வாசிக்க வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
இப்படித்தான் 2019ம் வருடம் கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞர் ஒருவர் பாடிய 'கண்ணாண கண்ணே' பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த இளைஞரை அழைத்து தனது இசையில் வெளிவந்த 'சீறு' படத்தில் 'செவ்வந்தியே...' என்ற பாடலைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் இமான்.