‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
தமிழ் திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக நிதி திரட்டும் விதமாக 'நவரசா' என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் இதில் இடம் பெறுகின்றன. இதில் ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள 'இன்மை' என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார் நடிகை பார்வதி. நாயகனாக சித்தார்த் நடித்துள்ளார். இதை மரியான் பட இயக்குனர் பரத் பாலா தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிபை முடித்துள்ள பார்வதி, இந்தப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டள்ளார். மேலும் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், “என்ன ஒரு நாளாக அது இருந்தது..!! நவரசாவில் நானும் ஒரு பாகமாக 'இன்மை' என்கிற ரொம்பவே புத்திசாலித்தனமான குறும்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நானும் ஒரு பாகமாக இருக்கும் வாய்பை பெற்றேன்.. அதுமட்டுமல்ல, மரியான் படத்தை அடுத்து எட்டு வருடங்களுக்கு பிறகு பரத்பாலாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார் பார்வதி.