லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
“புன்னகை பூ கீதா” நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்துள்ள படம் "நானும் சிங்கிள் தான்". கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர். கோபி இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது : “ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படம். கதைக்கான காட்சிகள் வித்தியாசமாகவும், இளமையாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் வாழ்வில் எடுக்கும் சில சிக்கலான முடிவுகளையும், பெமினிசம் தொடர்பான சில விஷயங்களையும் இப்படம் பேசியுள்ளது'' என்றார்.
படம் இம்மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.