கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தமிழிலும் தெலுங்கிலும் வில்லத்தனம், சென்டிமென்ட் என மாறிமாறி நடித்து அலுத்துவிட்டதோ என்னவோ, கடந்த இரண்டு வருடங்களாக நடிப்புக்கு தீனி போடும் மலையாள திரையுலகின் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். கடந்த வருடம் ஜெயராமுடன் அச்சாயன்ஸ் என்கிற படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், தற்போது ஒரேசமயத்தில் மோகன்லாலுடன் ஒடியன். நீராளி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது பிருத்விராஜ் தனது சொந்தநிறுவனம் மூலம் தயாரித்து நடித்து வரும் 9 என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இதில் டாக்டர் இனாயத் கான் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். பிருத்விராஜ் விஞ்ஞானியாக நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் தமிழில் மொழி படத்தில் திக் பிரண்ட்ஸ் ஆகவும், அதை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான அன்வர் படத்திலும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சுமார் ஏழு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் .