படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

'அயோத்தி' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் பிரீத்தி அஸ்ரானி, தெலுங்கில் 'பிரஷர் குக்கர், சீட்டிமார்' படத்தில் நடித்து விட்டு 'அயோத்தி' மூலம் தமிழுக்கு வந்தார். அதில் அவர் வடநாட்டு பெண்ணாக நடித்திருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு 'எலெக்ஷன், கிஸ், பல்டி' படங்களில் நடித்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் 'கில்லர்' படத்தில் நடித்து வருகிறார். தவிர விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் நடிக்கிறார்.
பொதுவாக தனது கேரியர், படங்கள் பற்றி மட்டுமே பேசும் பிரீத்தி, சமீபத்தில் நடிகை கவுரி கிஷன் மீது ஒரு யுடியூப்பர் கேட்ட உருவ கேலி மாதிரியான கேள்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஒருவர் எதையாவது கேட்டுவிட்டு, 'நான் நகைச்சுவையாகத்தான் கேட்டேன்' என்று மழுப்ப நினைக்கிறார்கள். ஆனால் எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு அது எவ்வளவு வலிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
இந்த விஷயத்தில் அந்த நடிகை (கவுரி கிஷன்) திடமான நிலையில் அந்த கேள்வியை எதிர்கொண்டது நல்ல விஷயம். பத்திரிகையாளர் சந்திப்பு எதற்காக நடக்கிறதோ, அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதுதான் சரியாக இருக்கும். அங்கு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் பிரீத்தி.