ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? |

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் 'வெண்ணிலா கபடி குழு, முண்டாசுப்பட்டி, ராட்சசன், இன்று நேற்று நாளை, கட்டா குஸ்தி, ஜீவா' போன்ற வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி பெற்றவர்.
தற்போது விஷ்ணு விஷால், 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் அவரது தம்பி ருத்ரா என்பவரை அறிமுகம் செய்கிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஷ்ணு விஷால் பேசியது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி, "விஜய் ஆண்டனியின் 'நான்', பரத்தின் 'காதல்' ஆகிய திரைப்படங்களில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் காரணமே இல்லாமல் 'நான்' படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். 'சென்னை -28' படத்திற்கான ஆடிஷனிலும் கலந்து கொண்டேன். சுமார் 7 வருடங்களாக சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட பிறகே, 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” எனக் கூறினார்.