தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் டிரைலரை நேற்று முன்தினம் மாலை யுடியூப் தளத்தில் வெளியானது. நேற்று காலையில் அதன் பார்வைகள் 12 மில்லியனைக் கடந்து, கமல் நடித்து வெளிவந்த 'விக்ரம்' டிரைலரின் சாதனையை முறியடித்தது.
நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளையும் சேர்த்து 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழில் மட்டுமே 25 மில்லியன் பார்வைகளையும், மற்ற மொழிகளில் 5 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர்களில் 'தக் லைப்', 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 32.01 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் 'குட் பேட் அக்லி', 31.91 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாமிடத்தில் 'லியோ', 29.2 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாமிடத்தில் 'தி கோட்', 29.08 மில்லியன் பார்வைகளுடன் நான்காமிடத்தில் 'பீஸ்ட்' டிரைலர்கள் உள்ளன.




