ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன. படமும் ரசிகர்களை வெகுவாகக் கவரவில்லை. இருந்தாலும் படம் வெளியான மறுநாள் படத்தின் முதல் நாள் வசூல் 46 கோடி எனவும், அதற்கடுத்து நான்கு நாட்களுக்குப் பிறகு 100 கோடி வசூல் என்றும் அறிவித்தார்கள். அதன்பிறகு வசூல் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நேற்று 235 கோடி வசூல் என்ற அறிவிப்பு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு வசூலில் மிகவும் தடுமாறிய படம் எப்படி 235 கோடி வசூலைப் பெற்றது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், நேற்று வெளியிட்ட போஸ்டரில் 235 க்குப் பக்கத்தில் '*' 'ஆஸ்ட்டரிக்ஸ்' குறியீடு ஒன்று இருந்ததை சிலர் கவனிக்கத் தவறினார்கள்.
போஸ்டரின் பக்கத்தில் அதற்குரிய விளக்கம் இடம் பெற்றுள்ளது. “தியேட்டர் மற்றும் தியேட்டர் அல்லாத வருவாய்' என்பதே அது. தியேட்டர் வசூல், ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை இன்ன பிற உரிமைகளுடன் சேர்த்துத்தான் 235 கோடி என்பதுதான் நேற்று வெளியான போஸ்டரின் உண்மைக் காரணம். ஆக, 'ரெட்ரோ' படத்தால் தங்களுக்கு லாபம்தான் என தயாரிப்பு நிறுவனம் மறைமுகமாகச் சொல்ல முயற்சிக்கிறது.