பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி |

சூரி நடிப்பில் வெளியாகி உள்ள மாமன் படத்தில் கவுரவ வேடத்தில் விமல் நடித்துள்ளார். சூரியும் விமலும் பல படங்களில் நடித்து இருக்கிறார்கள். விமல் நடித்த பல படங்களில் சூரி காமெடி பண்ணியிருக்கிறார். அந்த நட்புக்காக, சூரி கதை நாயகனாக நடித்த இந்த படத்தில் விமல் நடித்து இருக்கிறார் என்று ஒரு தரப்பும், மாமன் படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜனுக்காக நடித்தார் என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது.
தொடர் தோல்வி கொடுத்து வந்த விமலுக்கு விலங்கு என்ற வெப் சீரியஸ் மூலமாக வெற்றிக் கொடுத்தவர் பாண்டியராஜ். அந்த நன்றி கடனுக்காக அவர் இயக்கிய இந்த படத்தில் ஒரு திருமண வீடு காட்சியில் நடித்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் உட்பட சில படங்களிலும் விமல் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். மாமன் படத்தில் சோகத்தில் இருக்கும் சூரியிடம் சிரிக்க வெச்சுகிட்டு இருந்த உன்னை இப்படி சோகமாகிட்டாங்களே என்று டைமிங் ஆக விமல் சொல்லும் வசனமும் பிரபலம் ஆகியுள்ளது.




