வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி | நாகேஷ் பேரன் நடிக்கும் புதிய படம் | நாயகன் ஆன பாடலாசிரியர் பிரியன் | அமெரிக்காவில் படம் தயாரித்து, நடிக்கும் நெப்போலியன் | பிளாஷ்பேக்: கமலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ரகுவரன் | பிளாஷ்பேக்: தயாரிப்பாளராகி காணாமல் போன நடிகை | 'ஜனநாயகன்' சென்சார் விவகாரம்: விஜய் மவுனமாக இருப்பது சரியா? | ரஜினி படக்கதை தெரியும், சொல்லமாட்டேன்: சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' படத்தில் 'ரோபோக்கள்' : தகவலை வெளியிட்ட ஒரிஜனல் இயக்குனர் |

நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு மீண்டும் கேரளா கோழிக்கோட்டில் தொடங்கி உள்ளது. 20 நாட்கள் வரை அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி தனது போர்ஷனை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என தகவல். கண்டிப்பாக, ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்ற டார்க்கெட்டுடன் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஜினி தவிர, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் போன்ற மற்ற மொழி முன்னணி நடிகர்களும் நடிப்பதால் இந்த பட்ஜெட் சாத்தியம் என்று படக்குழு நினைக்கிறதாம். வில்லனாக பஹத்பாசில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வழக்கமான மார்க்கெட் தவிர, புதிய ஏரியாவிலும், புதிய நாடுகளிலும் இந்த படத்தை பிஸினஸ் பண்ண இப்பவே ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
ரஜினியை பொறுத்தவரையில் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறாராம். பிஸினஸ், வரவு செலவில் தலையிடுவது இல்லை. தன் படத்தால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்று மட்டும் அடிக்கடி சொல்கிறாராம்.




