தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள ‛தக்லைப்' படத்தில் நடித்து முடித்திருக்கும் கமல்ஹாசன், விரைவில் இந்தியன்-3 படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடித்து கொடுக்கப் போகிறார். இந்த நேரத்தில், ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கும் தயாராகி விட்டார். கமலின் 237வது படமான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர்கள் அன்பறிவுடன் கமலஹாசன் நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இப்படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.