என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‛குட் பேட் அக்லி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் முதல் நாளே 50 கோடி வசூலித்த நிலையில், நேற்று 100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தில் அஜித் மட்டும் இன்றி திரிஷாவின் நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர் சிறப்பாக நடித்த காட்சிகளை சுட்டிக்காட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்த திரிஷா, நன்றி மாமே என்று கேப்ஷனுடன் ஒரு பதிவு போட்டுள்ளார். கூடவே நடிகர் பிரபு மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும்  வெளியிட்டுள்ளார் திரிஷா.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            