பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ரெட்ரோ'. இந்த படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படத்தின் ‛ஒரு தீயில்' என்று தொடங்கும் சிங்கிள் பாடல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சித்ஸ்ரீராம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள அந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் சூர்யா-பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன.




