வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா நடித்த ‛வீர தீர சூரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படம் கடந்த மார்ச் 27ம் தேதி திரைக்கு வந்தது. முதல் நாளில் முதல் இரண்டு காட்சிகள் திரையிடப்படாத நிலையில் மாலை காட்சி திரையிடப்பட்ட இந்த படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. அதனால் 100 கோடி வசூல் கிளப்பில் இப்படம் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விக்ரம் கூட இந்த படத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்படம் திரைக்கு வந்து இதுவரை 65 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறுகிறார்கள். குறிப்பாக, கடந்த பத்தாம் தேதி முதல் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படம் வெளியாகி விட்டதால் வீர தீர சூரன் படம் ஓடும் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக சொல்கிறார்கள்.




