டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி | நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு | மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் | ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' |

 
1981ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வெளிவந்த படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. சந்திரசேகருக்கு இது இரண்டாவது படம், விஜயகாந்துக்கு திருப்பம் தந்த படம். ரஜினிகாந்த் போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த விஜயராஜா, தனது பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு சினிமா வாய்ப்பு தேடி வந்தார். சில படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அமைந்து அவரை ஆக்ஷன் ஹீரோவாக்கிய படம்தான் 'சட்டம் ஒரு இருட்டறை'.
இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சட்டம் ஒரு இருட்டறை 'செட்டனிக்கு காலு நீவு' என்ற பெயரில் தெலுங்கிலும், 'மாட்டுவின் சட்டங்களே' என்ற பெயரில் மலையாளத்திலும், 'நீயாவு எல்லிடே' என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் ஆனது. இந்தியில் 'அந்தா கானூன்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜயகாந்த் நடித்த கேரக்டரில் ரஜினி நடித்தார், பூர்ணிமா ராவ் நடித்த கேரக்டரில் ரீனா ராய் நடித்தார். ரஜினியின் அக்காவாக ஹேமமாலினி நடித்தார். அமிதாப் பச்சன் ரஜினிக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்தார். படம் இந்தியிலும் சூப்பர் ஹிட்டாகி ரஜினியை பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தியது.