டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் | ஒரே படத்தில் அறிமுகமாகும் சின்னத்திரை நடிகைகள் | மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் |
தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் ரஜினியின் மகளாக பிரீத்தி என்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பெற்றோர் குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ''கமல்ஹாசன், சரிகாவின் மகளாக இருப்பது எனக்கு பெருமை தான். அதே சமயம் என்னை அனைவருமே கமலின் மகள் என்றுதான் கூறுகிறார்கள். என் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக உள்ளது. அதனால் எனக்கு என்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறேன்,'' என்று கூறியிருக்கும் ஸ்ருதிஹாசன், ''எனது பெற்றோர் பிரிந்த பிறகு அம்மாவுடன் நானும் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் பிடிவாதமாக பிரிந்து வாழ்வது வருவது என்னையும் எனது தங்கை அக்ஷராவையும் பெரிய அளவில் பாதித்துள்ளது,'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.