இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானவர் என்றாலும் தனது நடிப்புத் திறமையால் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு அப்படியே பாலிவுட் வரை தன் எல்லையை விரிவு செய்து விட்ட துல்கர் சல்மான் எல்லா மொழிகளிலும் வருடத்திற்கு ஒரு படம் என்கிற கணக்கில் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் துல்கர் சல்மான் ஒரு பேட்டியில் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை ஒரு படம் தோல்வி அடைகிறது என்றால் அது என்னுடைய பொறுப்பு தான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான 'கிங் ஆப் கொத்த' என்கிற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறி அதிர்ச்சி அளித்தது. இத்தனைக்கும் துல்கர் சல்மான் இந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் மலையாளத்தில் புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை. அந்த படத்திற்கான தோல்விக்கு தான் மட்டுமே பொறுப்பு என்று கூறியுள்ள துல்கர் சல்மான் அந்தப் படத்தின் இயக்குனராக அறிமுகமாகிய தனது நண்பர் அபிலாஷ் ஜோஷி திறமையானவர் என்றும், இன்னொரு படத்தின் மூலம் அவர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.