சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு | 'ஸ்படிகம்' இயக்குனரை அழைத்து வந்து வித்தியாசமான முறையில் கவுரவித்த சுரேஷ்கோபி பட இயக்குனர் | மீண்டும் தனுஷ் உடன் படம்: உறுதிப்படுத்திய வெற்றிமாறன் | ‛தனி ஒருவன் 2' எப்போது வரும்?: இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! | நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. ‛மிருகம், குசேலன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். தற்போது மலையாளத்தில் சில படங்களிலும், டிவி சீரியலிலும் நடிக்கிறார்.
சென்னை, மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறத்தில் புகுந்த திருடர்கள் இருவர் அங்கிருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சித்தனர். அப்போது வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சோனா, திருடர்களை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அப்போது திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சோனா போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அடிப்படையாக வைத்து திருடர்களை பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.