வயதான கமல், இளமையான திரிஷா: 'தக் லைப்' டிரைலர் சர்ச்சை | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? |
நடிகையும் பா.ஜ மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா, தன் கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் இன்று(ஆக., 26) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அப்போது பாதுகாப்பு கருதி சில விவரங்களை ஊழியர்கள் கேட்டனர். இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நமீதா மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
அதில், தன்னை சாமி தரிசனம் செய்ய விடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்ட கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபுவை கேட்டு கொள்ளவதாக கூறினார்.
கோயில் ஊழியர்கள் கூறுகையில், "முகக்கவசம் அணிந்து வருவோரிடம் பாதுகாப்பு கருதி இதுபோல் கேட்பது நடைமுறை தான். அவர் நடிகை என்பது முன்கூட்டியே தெரியாது" என்றனர்.
கோயிலில் நடந்த சம்பவம் குறித்து நமீதா, அவரது கணவர் கூறுகையில், ‛‛மதுரை இஸ்கான் கோயிலில் தரிசனம் செய்து விட்டு கோயில் நிர்வாகிகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றோம். கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் எங்களை தடுத்து 'ஹிந்துவா, முஸ்லிமா' என கேள்வி எழுப்பி, 'நீங்கள் முஸ்லிம் என தகவல் கிடைத்துள்ளது. எனவே ஹிந்து என்பதற்கான சான்றிதழ் காட்டுங்கள்' என்றனர்.
அப்போது ஆதார் அட்டையை காண்பித்த போதும் 'அதில் மத அடையாளம் இல்லை' என கூறி அவமரியாதையாக பேசினர். 15 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் செய்து காக்க வைத்தனர். குங்குமத்தை நெற்றியில் வைக்க சொல்லி உள்ளே அனுமதித்தனர். நாடு முழுவதும் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளோம். பிறப்பால் நாங்கள் ஹிந்து. உரிய விளக்கம் அளித்தும் ஊழியர்கள் ஏற்கவில்லை.
இதுதொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை. கோயிலுக்கு வருபவர்களை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும். தகுதியான அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றனர்.