'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் எஸ்கே- 23 வது படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
வித்யூத் ஜம்வால் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛துப்பாக்கி படத்தில் என்னை மிகச் சிறப்பாக காண்பித்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஹீரோக்களுக்கு இணையாக வில்லன்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் துப்பாக்கி படத்தை போலவே இப்போது அவர் இயக்கத்தில் நடித்து வரும் படத்திலும் என்னை மிரட்டலான வில்லனாக நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக, இப்பட கதையை என்னிடத்தில் சொல்லிவிட்டு, துப்பாக்கி படத்தில் செய்த அதே மேஜிக்கை இந்த படத்திலும் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனால் அதை கருத்தில் கொண்டு இப்படத்தில் எனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யூத் ஜம்வால்.
எஸ்கே 23வது படத்தின் டைட்டில் இந்த மாதத்தில் வெளியாகும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள்.