தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒரே சமயத்தில் இரண்டு பீரியட் படங்களைத் தயாரித்து வருகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் 'தங்கலான்' படம், சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் 'கங்குவா' ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.
இந்த இரண்டு படங்களில் 'கங்குவா' படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், 'தங்கலான்' படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்கள். ஆனால், ஆகஸ்ட் 15ல் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களைப் பற்றி அதில் பணியாற்றியுள்ளவர்கள் பில்ட்அப் கொடுத்துள்ளார்கள்.
'தங்கலான்' படம் பற்றி அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், “தங்கலான்' பின்னணி இசை முடிவடைந்தது. எனது சிறந்ததைக் கொடுத்துள்ளேன். என்ன ஒரு படம். எதிர்பார்க்கிறேன். அற்புதமான டிரைலர் ஒன்று விரைவில் வர உள்ளது. உங்களை பிரமிக்க வைக்கப் போகிறது. இந்திய சினிமாவே 'தங்கலான்' படத்திற்காக தயாராக இரு,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'கங்குவா' படம் பற்றி அதற்குப் பாடல் எழுதியுள்ள விவேகா, “கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவின் பெருமைமிகு பிரம்மாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு உச்சம். இந்த சிறந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
இரண்டு பேரும் அடுத்தடுத்து பதிவிட்டுள்ள அந்தப் படங்களுக்கு சரியான பில்ட்அப்பைக் கொடுத்துள்ளது.