நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு. 1997ல் வெளிவந்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாமனார். 'சேது, நந்தா, ஜெயம், திருமலை, வாரணம் ஆயிரம், எந்திரன், எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். தற்போது தெலுங்கில் 'தேவரா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
'இந்தியன் 2' படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரவி வர்மன் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குச் சென்றதால் ரத்தினவேலு ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றார். சில கட்டப் படப்பிடிப்புகளில் பணியாற்றிய பின் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகவே அவரும் விலகினார். பின்னர் ரவி வர்மன் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
நேற்று இப்படத்தின் 'காலண்டர்' பாடல் வெளியானது. பாடலைப் பார்த்த பலரும் பாடல் படமாக்கப்பட்ட இடமும் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார்கள்.
அதையடுத்து ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு அவரது எக்ஸ் தளத்தில், “அனிருத்தின் இசையில் உருவான இந்த அழகான பாடலை 'இந்தியன் 2' படத்திற்காக பொலிவியா-வில் படமாக்கினோம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அதன்பிறகே அவர்தான் அந்தப் பாடலை அற்புதமாகப் படமாக்கியவர் என்பது ரசிகர்களுக்குத் தெரிய வந்தது. யு டியூப் வீடியோவிலும் அப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்தது ரத்தினவேலு என்று குறிப்பிடப்படவில்லை. படத்தின் போஸ்டர்களிலும் அவரது பெயர் இதுவரை இடம் பெறவில்லை. இது குறித்து ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.