இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் | அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி |
சமீப வருடங்களாகவே பிரபல ஹீரோக்கள் நடித்த ஹிட் படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பிறந்தநாளிலோ அல்லது அந்த படத்தின் பத்தாவது, இருபதாவது வருட கொண்டாட்டமாகவோ டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி திரைப்படம் கிட்டத்தட்ட 30 கோடி வரை வசூலித்தது. பல திரையரங்குகளில் ஒரு மாதத்தையும் தாண்டி ஓடியது. இதைத்தொடர்ந்து பல படங்கள் இதுபோன்று ரீ ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
இங்கு தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் அவ்வப்போது சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மணிசித்திரதாழ் திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் 2000ல் வெளியான தேவதூதன் திரைப்படமும் இதேபோல 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை நடிகர் மோகன்லாலே அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சிபிமலயில் இயக்கத்தில் உருவாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்துள்ள இந்த படத்தை கவுரவிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அமானுஷ்ய திரில்லராக இந்தப்படத்தில் ஜெயப்ரதா கதாநாயகியாக நடித்திருந்தார்.