கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் | நுரையீரல் பிரச்னை : கன்னட நடிகை ரஷ்மி லீலா மரணம் | நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி | 'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? |

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமானது.
இந்த வருடத்தின் அடுத்த ஆறு மாதங்களில் வெளிவர உள்ள பல படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்புகள் வந்துவிட்டது. விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்', அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்புதான் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் 'விடாமுயற்சி' பற்றிய அறிவிப்பு நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் தளத்தில் 'நாளை ஞாயிறு இரவு 7.03 மணிக்கு' என லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை 'டேக்' செய்து பதிவிட்டுள்ளார். அதனால், அது 'விடாமுயற்சி' அப்டேட்டாக மட்டுமே இருக்க வேண்டும்.




