டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா |
இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி வசூல் என்பதுதான் ஒரு காலத்தில் சாதனையாக இருந்தது. ஆனால், கடந்த ஓரிரு வருடங்களில் 1000 கோடி என்பது சாதனையாக மாறிவிட்டது.
இருப்பினும் 100, 200 கோடி என வசூல் கடப்பதும் முக்கியமான விஷயம்தான். அந்த விதத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் தொடர்ந்து 200 கோடி வசூல் எனக் கொடுத்த நடிகராக மாறியிருக்கிறார் பிரபாஸ். அவரது நடிப்பில் நேற்று முன்தினம் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் அவரது 6வது 200 கோடி படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் 500 கோடியைக் கடக்கப் போவது உறுதி. 1000 கோடியைக் கடக்குமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
“பாகுபலி 1, பாகுபலி 2, சாஹோ, ஆதி புருஷ், சலார்” ஆகிய படங்கள் இதற்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்து 200 கோடி வசூலைக் கடந்த படங்கள்.
இருப்பினும் 200 கோடி படங்களில் தென்னிந்திய அளவில் 7 படங்களுடன் விஜய் முன்னிலையில் இருக்கிறார். அடுத்து 'தி கோட்' படமும் 200 கோடி வசூலைக் கடந்தால் அவரது கணக்கில் 8 படங்கள் சேர்ந்துவிடும்.
இருநாளில் ரூ.298.50 கோடி
கல்கி 2898 ஏடி படம் வெளியான இரு தினங்களில் ரூ.298.50 கோடி வசூலை எட்டி உள்ளதாக படக்குழு தயாரிப்பில் அறிவித்துள்ளனர்.