ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து நாயகனாக நடித்த படம் நல்லதம்பி. 1949ம் ஆண்டு வெளியானது. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் அண்ணாதுரை. 1936ம்ஆண்டு வெளியான 'மிஸ்டர்டீட்ஸ் கோஸ்டுடவுன்' என்கிற ஆங்கில படத்தைப் பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன், அதைத்தழுவி ஒருகதை எழுதித்தருமாறு அண்ணாதுரையிடம் சொல்ல அவர் எழுதிக் கொடுத்த படம்தான் 'நல்லதம்பி'. இதுதான் அண்ணாதுரைக்கு முதல் திரைப்படம். டைட்டிலில், கதை, வசனம் அண்ணாதுரை எனப் போட்டார்கள்.
படத்திற்கு சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருக்கிறார். கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர் இயக்கி, இருக்கிறார்கள். பிற்காலத்தில் 'ப' வரிசைப் படங்களை இயக்கி குவித்த பீம்சிங் இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
என்.எஸ்.கிருஷ்ணன் ஜோடியாக டி.ஏ.மதுரம் நடித்திருந்தார். பானுமதி, எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, நாராயணசாமி, புளிமூட்டை ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், வி.எஸ்,ராகவன், எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
மக்களுக்காக சேவை செய்து வரும் ஒருவனுக்கு திடீரென ஜமீன்தாரராகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வான் என்பது தான் படத்தின் கதை.