ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்சன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் படம் 'மிஸ் யூ'. மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். 'பட்டத்து அரசன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் இவர்.
இவர்களுடன் கருணாகரன், பாலசரவணன், லொள்ளு சபா மாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படம் பற்றி இயக்குநர் என்.ராஜசேகர் கூறும்போது, ‛‛ஆண்-பெண் நட்பு, அன்பு, காதலை பற்றி சினிமாவில் சொல்வதற்கு இன்னும் தீராத அளவிற்கு விஷயங்கள் இருக்கிறது. காதல் வரும்போது அழகாக மாறும் நம் உலகம், அதன் தோல்வியை பார்க்கும்போது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அப்படி ஒரு லவ் பிரேக்கப்பிற்கு பிறகு பிடிக்காமல் போய்விட்ட பெண்ணோடு ஒரு சாமானிய இளைஞனுக்கு வரும் காதல் தான் இந்தப்படத்தின் கதை.
மீண்டும் ஒரு நிஜமான காதல் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சித்தார்த், இந்தக்கதையை கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்தார். நாயகி சுப்புலட்சுமியாக வாழ்ந்திருக்கிறார் ஆஷிகா ரங்கநாத். படம் வெளியான பிறகு பெண்களே 'லவ் யூ' என சொல்லும் விதமாக ரசிகர்களை கவருவார்'' என்றார்.