கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'பிரேமம்' மலையாளப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்களும் ரசித்துப் பார்த்தார்கள். அப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதன்பின் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா நடித்த 'சைரன்' படம் கடந்த வாரம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று தன்னுடைய 28வது பிறந்தநாளை அனுபமா கொண்டாடினார். மொரிஷியல் தீவுகளிலிருந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று 28 வயதாகிறது. என் வாழ்க்கையை, எங்கள் வாழ்க்கையை உருவாக்கியதற்கு நன்றி.
இன்று என் பிறந்தநாளைக் கொண்டும் போது ஒரு நடிகையாக என் கனவை வாழ்வதற்கான ஒரு தசாப்தமும் முடிகிறது என்பதைக் குறிப்பிடுகிறேன். 18 வயதிலிருந்து எனது ஒவ்வொரு அடியிலும் நீங்கள் இருக்கிறீர்கள். எனது பயணத்தில் உயர்வு, தாழ்வு ஆகியவற்றில் உடனிருந்து என்னை உற்சாகம் செய்கிறீர்கள். உங்களின் அன்பும், ஆதரவும் என்னைத் தொடர்ந்து நடத்தும் எரிபொருளாக இருக்கிறது.
அழகாக வாழ்வதற்கும், தைரியமாக கனவு காண்பதற்கும், இந்த அற்புதமான சாகசத்தைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கும் உடனிருங்கள். என் சிறகுகளுக்குக் கீழே காற்றாக இருப்பதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.