குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
தா.சே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தை குறித்து நமக்கு சுவாரஸ்யமாக கிடைத்த தகவலின்படி, 80, 90 காலகட்டங்களில் நடக்கும் போலி என் கவுண்டர்களுக்கு எதிராக போராடும் கதை களத்தில் இதனை படமாக்கி வருகின்றனர். 80, 90 காலகட்டத்தை உருவாக்க கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பிரமாண்டமான அரங்குகளை படக்குழுவினர் உருவாக்கினர் என்கிறார்கள்.