‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி | எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் |
நயன்தாரா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்னபூரணி என்கிற படம் வெளியானது. பின்னர் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள், வசனங்கள் இந்து மத உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த படம் சம்பந்தப்பட்ட ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சென்சார் அதிகாரிகள் பார்த்து ஏற்கனவே சான்றிதழ் அளித்த ஒரு படத்தை குறிவைத்து இப்படி தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அன்னபூரணி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பேரரசு வெற்றிமாறனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “வெற்றிமாறனின் கருத்து வரவேற்கப்படுகிறது. இதே போன்ற கருத்தை கேரள ஸ்டோரி படம் வெளியான சமயத்திலும் அவர் வெளிப்படுத்தி இருந்தால் சினிமா மீது அவர் நிஜமாகவே அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்பது உறுதியாகி இருக்கும். ஆனால் அவர் அன்னபூரணிக்காக மட்டும் குரல் கொடுப்பதை பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. சினிமா ரசிகனாக இருங்கள் வெற்றிமாறன்” என்று கூறியுள்ளார்.
பேரரசுவின் இந்த கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.